சீனித்துளசி { STEVIA} என்பது ஒரு செடியின் பெயர். அதன் இலைகளில் இருந்து ஸ்டீவியோசைட் ரெபோடீயோசைட் என்னும் மூலக்கூறுகள் தரம் பிரிக்கப்பட்டு எடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் வெல்லத்தில் மற்றும் வெண்ணிலா இலைகளில் இருந்து எவ்வாறு வெள்ளைச்சர்க்கரை மற்றும் வெண்ணிலா வாசனை பொடி எவ்வாறு எடுக்கப்படுகின்றதோ அதே முறையில் தான் சீனித்துளசி { STEVIA} வெள்ளை பொடி { White Powder} தயாரிக்கபடுகின்றது. சீனித்துளசி வெள்ளை பொடியில் நோயை உருவாக்கும் காரணிகள் இல்லை.
இன்றைய தேதி வரை, உலகெங்கிலும் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாத காரணத்தால் சீனித்துளசி இலைகளில் இருந்து பெறப்படும் மூலக்கூறுகள் என்பதால் இது இன்றளவிலும் இயற்கையான இனிப்பு என்றே உலகெங்கும் விற்பனையாகிறது.
வெங்கியைக் கேளுங்க!
Thanks - DINAMALAR-25.09.2017
'சர்க்கரைத் துளசி' நீரிழிவு நோயைத் தடுக்கும் என்கிறார்கள். அந்தத் தாவரத்தில் என்ன இருக்கிறது?
ஜி. இந்துமதி, 7ம் வகுப்பு, பிரின்ஸ் மெட்ரிக், நங்கநல்லூர், சென்னை.
சர்க்கரை, குளூகோஸ் போன்ற பல்வேறு மூலக்கூறுகள் நமது நாக்கில் இனிப்புச் சுவையைத் தூண்டும். தாவரப் பொருட்களிலிருந்து பிரித்து எடுப்பதை இயற்கை இனிப்பு எனவும், செயற்கை முறையில் தயாரிப்பதை செயற்கை இனிப்பு எனவும் கூறுகிறோம்.
பிரேசில், பராகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளைத் தாயகமாகக் கொண்ட 'ஸ்டீவியா ரெபோடியானா' (Stevia Rebaudiana) எனும் சூரியகாந்தி குடும்ப தாவரம்தான் சீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி. தாவரவியல்படி, இது பேசில் வகை சார்ந்த தாவரம் இல்லை. இதன் இலையில் இனிப்புச் சுவை தரும் ஸ்டீவியோசைடு (stevioside), ரெபாடியோசைடு (Rebaudioside) போன்ற ஸ்டீவியால் கிளைகோசைடு (Steviol Glycosides) வேதிப்பொருட்கள் செறிவாக இருப்பதால், கரும்புத் தண்டில் இனிப்புச் சுவை இருப்பது போல இதன் இலையே இனிப்பாக இருக்கும்.
இந்த மூலக்கூறுகள் சர்க்கரையின் இனிப்புச் சுவையைவிடவும்
250 - 300 மடங்கு கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவேதான், இதனை உள்ளூர் மக்கள் மிட்டாய் இலை (Candy Leaf), இனிப்பு இலை (Sweet Leaf), சர்க்கரை இலை (Sugar Leaf) என அழைத்து வந்தனர். கரும்பு மட்டுமல்ல; இலுப்பைப்பூ, பீட்ரூட் முதலியவையும் இனிப்புச் சுவை தரும்.
இனிப்பைப் பெற சாதாரண சர்க்கரையைவிட 250 மடங்கு குறைவாக ஸ்டீவியா இனிப்பைப் பயன்படுத்தினால் போதும். இதனால் நாம் உட்கொள்ளும் கலோரி அளவு குறைவதால், உடல் பருமனைக் குறைக்க உதவும் எனவும் பலர் கூறுகின்றனர். எனினும் கூடுதல் இனிப்புச் சுவை தரும் பொருட்கள் நடைமுறையில் பயன் தருவதில்லை என, பல ஆய்வுகள் சுட்டுகின்றன.
இதை உட்கொண்டால் சர்க்கரை நோய் அகலும் என்றோ, சர்க்கரை நோய் வராது என்றோ கூற முடியாது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பை ஆபத்தில்லாமல் சுவைக்க இதைப் பயன்படுத்தலாம், அவ்வளவே. சர்க்கரை செறிவாக உள்ள உணவை உட்கொள்ளும்போது, ரத்தத்தில் குளூகோஸ் அளவு கூடும்; சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஆபத்து. ஆனால், ஸ்டீவியா இனிப்பைப் பயன்படுத்தும்போது, ரத்த குளூகோஸ் கூடவில்லை என்பதால், சிலவகை சர்க்கரை நோயாளிகள் ஆபத்தில்லாமல் இதைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.

Comments
Post a Comment