பாதுகாப்பான; மிதமான கலோரிகள் கொண்ட இயற்கையான வழிமுறை

பல நூற்றாண்டுகளாக ஜப்பானில் உயர் ரக சீனித்துளசி ( STEVIA), இலைகளில் இருந்து பெறப்படும் மூலக்கூறு (WHITE POWDER), டீ , காபி, குளிர்பானம் போன்ற உணவுகளில் வெள்ளைச்சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தி வருகின்றனர். 

உலகெங்கிலும் உள்ள ஒழுங்குமுறை ஆணையம், மற்றும் நேர்மறை பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம் சார்பிலும் சீனித்துளசி இலைகளில் இருந்து பெறப்படும் வெள்ளை நிறத்தில் உள்ள மூலக்கூறை பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கப்பட்டன.

வெங்கியைக் கேளுங்க!   

Thanks DINAMALAR 25.09.2017

'சர்க்கரைத் துளசி' நீரிழிவு நோயைத் தடுக்கும் என்கிறார்கள். அந்தத் தாவரத்தில் என்ன இருக்கிறது?
ஜி. இந்துமதி, 7ம் வகுப்பு, பிரின்ஸ் மெட்ரிக், நங்கநல்லூர், சென்னை.


சர்க்கரை, குளூகோஸ் போன்ற பல்வேறு மூலக்கூறுகள் நமது நாக்கில் இனிப்புச் சுவையைத் தூண்டும். தாவரப் பொருட்களிலிருந்து பிரித்து எடுப்பதை இயற்கை இனிப்பு எனவும், செயற்கை முறையில் தயாரிப்பதை செயற்கை இனிப்பு எனவும் கூறுகிறோம். 
பிரேசில், பராகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளைத் தாயகமாகக் கொண்ட 'ஸ்டீவியா ரெபோடியானா' (Stevia Rebaudiana) எனும் சூரியகாந்தி குடும்ப தாவரம்தான் சீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி. தாவரவியல்படி, இது பேசில் வகை சார்ந்த தாவரம் இல்லை. இதன் இலையில் இனிப்புச் சுவை தரும் ஸ்டீவியோசைடு (stevioside), ரெபாடியோசைடு (Rebaudioside) போன்ற ஸ்டீவியால் கிளைகோசைடு (Steviol Glycosides) வேதிப்பொருட்கள் செறிவாக இருப்பதால், கரும்புத் தண்டில் இனிப்புச் சுவை இருப்பது போல இதன் இலையே இனிப்பாக இருக்கும். 
இந்த மூலக்கூறுகள் சர்க்கரையின் இனிப்புச் சுவையைவிடவும் 
250 - 300 மடங்கு கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவேதான், இதனை உள்ளூர் மக்கள் மிட்டாய் இலை (Candy Leaf), இனிப்பு இலை (Sweet Leaf), சர்க்கரை இலை (Sugar Leaf) என அழைத்து வந்தனர். கரும்பு மட்டுமல்ல; இலுப்பைப்பூ, பீட்ரூட் முதலியவையும் இனிப்புச் சுவை தரும்.
இனிப்பைப் பெற சாதாரண சர்க்கரையைவிட 250 மடங்கு குறைவாக ஸ்டீவியா இனிப்பைப் பயன்படுத்தினால் போதும். இதனால் நாம் உட்கொள்ளும் கலோரி அளவு குறைவதால், உடல் பருமனைக் குறைக்க உதவும் எனவும் பலர் கூறுகின்றனர். எனினும் கூடுதல் இனிப்புச் சுவை தரும் பொருட்கள் நடைமுறையில் பயன் தருவதில்லை என, பல ஆய்வுகள் சுட்டுகின்றன. 
இதை உட்கொண்டால் சர்க்கரை நோய் அகலும் என்றோ, சர்க்கரை நோய் வராது என்றோ கூற முடியாது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பை ஆபத்தில்லாமல் சுவைக்க இதைப் பயன்படுத்தலாம், அவ்வளவே. சர்க்கரை செறிவாக உள்ள உணவை உட்கொள்ளும்போது, ரத்தத்தில் குளூகோஸ் அளவு கூடும்; சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஆபத்து. ஆனால், ஸ்டீவியா இனிப்பைப் பயன்படுத்தும்போது, ரத்த குளூகோஸ் கூடவில்லை என்பதால், சிலவகை சர்க்கரை நோயாளிகள் ஆபத்தில்லாமல் இதைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.

நன்றி,
முத்துகிருஷ்ணன். ஜெ
MAKa FOODS,
Madurai
8526264660.

White Sugar :  கரும்பு (Sugarcane).

Seenithulasi ( STEVIA): சீனித்துளசி இலை


Natural Sweetener :


Natural Sweetener:


Glycemic index - 100

Glycemic index - 0

Per gram sugar - 5 Calories

Calories - 0 (per Gram serving)

Per Teaspoon = 4 Gram of sugar

Per gram- 0

Carbohydrates - (Calories * Gram) 5*4 = 20 (per Teaspoon serving)

Carbohydrates - 1 (per Gram serving)

Glycemic load  - 15 (per g serving)

Glycemic load - 0 (per Gram serving).


நாள் ஒன்றுக்கு ஒரு நபர் அதிகாலையில் ஒரு வேளை வெள்ளைச்சர்க்கரை கலந்த டீ அருந்துகின்றார் என்றால் சராசரியாக அவருக்கு கிடைக்கின்ற கலோரிகள்,
மேலே
குறிப்பிட்ட அட்டவனை படி சுமார் 20 கலோரிகள். இந்த கலோரிகளில் எந்த வித ஊட்டச்சத்தோ, உடலுக்கு தேவையான புரதமோ அரவே கிடையாது. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு விஷமாய் மாற கூடிய கலோரிகள் ஆகும்.

அது மட்டுமன்றி அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தவதாலும் மிக மிக பக்கவிளைவுகளை ஏற்ப்படுத்தும்.

நாள் ஒன்றுக்கு ஒரு டீ வீதம் 20 கலோரிகள் என்றால்.
ஒரு நாளைக்கு 2 முதல் 5 கிளாஸ் டீ அருந்தபவர்கள் உள்ளனர், ஏன் நானே 5 கிளாஸ் டீ குடிப்பேன்.

புரிகின்றதா? அன்பு மக்களே.

Comments