புதிய தலைமுறைக்கான புதிய இனிப்பு

புதிய தலைமுறைக்கான புதிய இனிப்பு,இயற்கை இனிப்பு சீனித்துளசி இயற்கையின் புதிய விதி 


சீனித்துளசி (ஸ்டிவியா):

சீனித்துளசி என்று தமிழில் அழைக்கப்படும் STEVIA  REBAUDIANA ஒரு மருத்துவப்பயிர், இப்பயிரானது சூரியகாந்தி குடும்பத்தை சார்ந்தது, இப்பயிரில் இருந்து எடுக்கப்படும் STEVIOSIDE & REBAUDIOSIDE வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுகிறது, லத்தின் அமெரிக்கா நாடான பராகுவே வில் STEVIA செடி அதிகமா உள்ளது,அங்கு இச்செடியின் இலைகளை பொடி செய்து சீனிக்கு பதிலாக பயன்படுத்துகின்றனர்.

சீனித்துளசி இலைகளில் உள்ள STEVIOSIDE மற்றும் REBAUDIOSIDE  என்னும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும், சீனித்துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பு கரும்பு சர்க்கரை இனிப்போடு ஒப்பிட்டு பார்த்தால், கரும்பு சர்க்கரையை விட 30 மடங்கு அதிக இனிப்பு சுவை கொண்டது.

மேலும் STEVIOSIDE இல் உள்ள இனிப்பின் அளவு சர்க்கரையை விட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது,இதில் புரதம்,நார்சத்து,சோடியம்,மெக்னீசியம், கால்சியம் ,பாஸ்பரஸ் ,வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது,மிக குறைந்த சர்க்கரை மற்றும் மாவுசத்து கொண்ட இந்த சீனித்துளசி நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வேலை சீனிக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது,நீரிழிவு குறை உள்ளவர்கள் மற்றும் இன்றி கர்ப்பிணி பெண்கள் முதல் உடல் பருமன் ஆன குழந்தைகள் வரை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்பும் அனைவரும் வெள்ளை சீனிக்கு மாற்றாக சீனித்துளசி இனிப்பை பயன்படுத்தலாம்.

சீனித்துளசி ( STEVIA ) பயன்கள்;
1} GLYCEMIC INDEX குறியீடு ZERO,  CALORIE  ZERO, CARBOHYDRATE  ZERO, என்பதால் சீனித்துளசி ரத்தத்தில்  சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை,

2}சீனித்துளசி BETA செல்களை செயல்படுத்த வைக்கிறது,அதாவது கணைய செயல்பாட்டினை சீர்படுத்துகிறது, இரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது,

3}சீனித்துளசி நுண்ணுயிர்களை எதிர்க்கும் திறன் கொண்டது,

4}உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது,

5}இரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது,


சீனித்துளசி [ STEVIA ] வெள்ளை சீனிக்கு மாற்றா?

ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்று வரும் போது வெள்ளை சீனி { WHITE SUGAR } அதிகமா உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல,ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் தேவை, அதில் வெள்ளை சீனியில் இருந்து 500 கலோரிகள் பெறப்படுகின்றன, அவை வெற்று கலோரிகளாகவும், உடலுக்கு ஆரோக்கியம் மற்ற கலோரிகளாவே வந்து சேர்கின்றது,என்று அமெரிக்க இருதய கூட்டமைப்பு { AMERICA HEART ASSOCIATION } ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது, வெள்ளைசீனியில் இருந்து பெறப்படும் அதிகப்படியான வெற்று கலோரிகளே நீரிழிவு நோய்க்கான காரணியாக அமைகின்றது என்றும் இருதய துடிப்பை வலுவிழக்க செய்கின்றது என்றும் கூறுகின்றன.

வெள்ளை சீனியை முற்றிலும் தவிர்ப்பதனால், நாம் பல நோய்களை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வை வாழலாம், ஆனால் சந்தைகளில் சர்க்கரைக்கு மாற்றாக கிடைக்கும் ( SUGAR FREE SUCRALOSE, ASPARTAME, SACCHARINE, போன்ற செயற்கையான இனிப்பான்களஅபாயகரமான நோய்களுக்கு இட்டு செல்கிறது,என்று பல ஆய்வுகள் கூறுகின்றன,


என்னதான் ஆரோக்கியமான சிறுதானிய உணவுகள் மற்றும் மூலிகை சூப்புகள், இயற்கையான காய்கறிகள் ஏதுவாக இருந்தாலும் வெள்ளைசீனிக்கு மாற்று மற்றும் வெள்ளைசீனிக்கு பயன்பாட்டை குறைத்தால் மட்டுமே நம் இளைய சமுதாயம் ஆரோக்யமாக வளமுடன், நலமுடன் வாழ வழி செய்ய இயலும்.

பிரபல இந்திய நாளிதழில் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு  2017 ஆம்  ஆண்டில் இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சீனா வை விட 92 MILLION விட குறைவாக 62 MILLION என்றும் இந்த எண்ணிக்கை வருகின்ற 2030 ல் 100 MILLION உயரும் என்றும் ஆய்வில் கூறுகின்றன,

தயவு செய்து வெள்ளை சீனியை தவிர்ப்போம்;

சீனித்துளசி இனிப்பை பயன்படுத்துவோம்,

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

Comments